
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா கடும் பதிலடி நடவடிக்கைகள் எடுத்ததைத் தொடர்ந்து, இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இதன் தாக்கமாக இன்று PSX சந்தை KSE-100 குறியீடு 2.12% வீழ்ச்சியுடன் 114,740 புள்ளிகளுக்கு குறைந்தது. இதேவேளை, பங்குச் சந்தையின் இணையதளமும் தற்காலிகமாக செயலிழந்தது.
சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானின் வளர்ச்சி வீதத்தை 2.6% எனக் குறைத்துள்ள சூழலில், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
இந்திய அரசின் இந்தஸ் நீர் ஒப்பந்தம் ரத்து, எல்லை மூடல் மற்றும் விசா சலுகை ரத்து ஆகிய நடவடிக்கைகள் காரணமாக பாகிஸ்தான் பொருளாதாரத்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.