தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித்குமார் மற்றும் சிவகார்த்திகேயன். தற்போது சிவகார்த்திகேயன் மதராஸி மற்றும் பராசக்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இதே போன்று நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை புரிந்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் இடையேயான போட்டியை நடிகர் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நேரில் கண்டு களிக்கிறார்கள். இந்த போட்டியை காண நடிகர் அஜித்துடன் நடிகை ஷாலினி மற்றும் மகள், மகன் ஆகியோரும் உடன் வந்துள்ளனர். தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸ்களில் நடிகர் அஜித் தீவிரமாக கலந்து கொண்டு வரும் நிலையில் திருமண நாளை கொண்டாடுவதற்காக இந்தியா வந்தார்.

 

தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக அவர் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் தற்போது குடும்பத்துடன் அவர் மேட்சை கண்டு களிக்கிறார். மேலும் அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் மகிழ்ச்சியோடு போட்டியை காணும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.