
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தாய் மாமன் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இதில் சிறுமியின் தாய்மாமனுக்கு திருமணமான நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் தன் தங்கையின் மகளை வளர்த்துப் படிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவ நாளில் சிறுமியின் மாமா மற்றும் அத்தை இருவரும் கூலி வேலைக்கு சென்று விட்டனர். அப்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் சிறுமி மற்றும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கூலி தொழிலாளியான 28 வயது விக்னேஷ் என்பவர் அங்கு சென்றுள்ளார்.
அவர் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு இதைப் பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் வீட்டில் இருப்பவர்கள் விசாரிக்கவே நடந்த விவரங்கள் தெரிய வந்தது.
பின்னர் சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷை கைது செய்தனர். மேலும் இதில் விக்னேஷுக்கு திருமணமாக இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.