சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. நேற்று நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. சென்னை அணியில் அதிகபட்சமாக டிவால்ட் பிராவிஸ் 43 ரன்கள் வரை எடுத்தார்.

 

ஹைதராபாத் அணியில் ஹர்ஷல் படேல் அதிகபட்சமாக 4 விக்கெட் வரை வீழ்த்தினார். இதை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ஆட்டநாயகன் விருது ஹர்ஷல் படேலுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து எம்.எஸ். தோனி பேசினார். அவர் பேசியதாவது, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தோம். 20 ரன்கள் வரை குறையாமல் எடுத்தோம்.

நடுவரிசை ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முடியாதது எங்களின் மிக முக்கியமான பலவீனமாக பார்க்கிறேன். இது போன்ற போட்டிகளில் ஒரு சில இடங்களில் ஓட்டைகள் இருந்தால் சரி செய்யலாம். ஆனால் பெரும்பாலான வீரர்கள் சரிவர விளையாட விட்டால் சரி செய்வது கடினம். ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் சரிவர விளையாட விட்டால் பரவாயில்லை. ஆனால் பெரும்பாலான வீரர்கள் சரிவர விளையாட விட்டால் என்ன செய்வது. வீரர்கள் சரியாக விளையாட விட்டால் கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும்.

ஆனால் வாய்ப்பைப் பெற்றுக் கொண்ட நான்கு வீரர்களும் சரிவர விளையாட விட்டால் என்ன செய்வது. நாங்கள் போதுமான ரன்கள் எடுக்காதது தான் தற்போது எங்களுடைய தோல்விக்கு காரணம். நான் எப்போதுமே 180 முதல் 200 ரன்களை அடிக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் ரன்களை சூழ்நிலைக்கு தகுந்தவாறு எடுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும் என்றார். மேலும் சிஎஸ்கே அணியில் பெரும்பாலான வீரர்கள் சரிவர விளையாடவில்லை என தோனி வேதனையுடன் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.