இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிளை மிகுந்த வேகத்தில் ஓட்டி, பரபரப்பான சாலையில் ஆபத்தான சாகசங்களை முயற்சிக்கிறார். பெண் தோழியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இளைஞர் கடுமையான வேகத்தில் வாகனங்களை ஓட்டினார்.

 

ஆனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோசமான விபத்தில் சிக்கினார். வீடியோ திடீரென விபத்துடன் முடிந்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை பதிவு செய்தனர். “இது நடக்கவேண்டியது தான்,” “அப்படித்தான் முடியும்,” என பலர் கருத்து தெரிவித்தனர்.

இளைஞர்களிடையே சமூக ஊடக புகழ் வேண்டி மேற்கொள்ளப்படும் சாகச முயற்சிகள் எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த வீடியோ மேலும் வலியுறுத்துகிறது. வெறும் லைக்ஸ்- க்காக உயிரை ஆபத்தில் விடக்கூடாது என்பதற்கான கடும் எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது.