தமிழகத்தில் இனி உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் கண்டிப்பாக சிறை தண்டனை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதன்படி உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் நேரடியாக சிறை தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான சட்ட முன் வடிவை சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கழிவுகளை முறையற்று கொட்டுவது மற்றும் குவித்து வைப்பது பொதுமக்களுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும். அண்டை மாநிலங்களில் இருந்து அடிக்கடி நம்முடைய மாநிலங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் வருவதாக கூறப்படுகிறது. அதன் பிறகு தான் இனி இப்படி செய்தால் நேரடியாக சிறைக்கு செல்லும் சட்டம் கொண்டுவரப்படும் என்றார். மேலும் கேரளாவில் இருந்து அண்மையில் தமிழகத்திற்கு மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.