
சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று ஒரு வாலிபர் செல்போன் கடைக்கு வந்து 16,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை 15,500 ரூபாய் பேரம் பேசி வாங்கியுள்ளார்.
இதனையடுத்து ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பி விட்டதாக வாலிபர் கூறியுள்ளார். அப்போது கடையில் வேலை பார்க்கும் பெண்கள் பணம் வரவில்லை என கூறியவுடன் அந்த வாலிபர் மீண்டும் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பியதாக சக்சஸ் மெசேஜ் காண்பித்துள்ளார்.
இருப்பினும் பணம் வந்ததற்கான மெசேஜ் வராததால் பெண்கள் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த நேரத்திலேயே அந்த வாலிபர் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து கடை உரிமையாளர் பாலமுருகன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.