
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மற்றும் நாளை கோயம்புத்தூரில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமான மூலமாக கோவைக்கு நடிகர் விஜய் புறப்பட்ட நிலையில் தற்போது கோவை விமான நிலையத்தை வந்தடைந்தார். கோயம்புத்தூர் வந்த நடிகர் விஜய்க்கு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து நடிகர் விஜய் வாகனத்தில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு கிளம்பியுள்ளார்.
இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து நடிகர் விஜய் திறந்த வெளி வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அவர் ரோடு ஷோ நடத்தியவாரே வாகனத்தில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்லும் நிலையில் செல்லும் இடமெல்லாம் தொண்டர்களின் கூட்டம் கடல் அலை போல நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் வாகனத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியாக செல்லும் நிலையில் திடீரென ரசிகர் ஒருவர் வாகனத்தின் மீது ஏறி வந்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
#Watch | கோவை: வாகனத்தின் மீது ஏறிய தொண்டர்கள்!
விஜய் கொடுத்த ஷாக் ரியாக்ஷன்! #SunNews | #Kovai | #TVKVijay pic.twitter.com/vLRsOQSteV
— Sun News (@sunnewstamil) April 26, 2025
இதேபோன்று மற்றொரு ரசிகரும் வாகனத்தின் மீது ஏறிய நிலையில் அவருக்கு விஜய் துண்டை போட்டுவிட்டார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து ரசிகர்கள் வாகனங்களின் மீது ஏறி வருவதால் பரபரப்பு ஏற்படுகிறது. நடிகர் விஜய் சிரித்த முகத்துடன் அவர்கள் அனைவரையும் எதிர்கொள்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.