உயிரி மருத்துவக் கல்லூரிகள் தொடர்பான மசோதாவைஅமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய இருப்பதாக சட்டப்பேரவையில் நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அந்த மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

மோசடி வழக்கில் அமைச்சர் பதவி குறித்து திங்களுக்குள் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில் செந்தில் பாலாஜி மசோதாவை தாக்கல் செய்யாதது அவர் ராஜினாமா செய்ய இருப்பதை உறுதி செய்வதாக அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சர்ச்சை கருத்து பேசிய பொன்முடிக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

துரைமுருகன், எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. கே.என் நேரு சகோதரருக்கு எதிரான வழக்கில் ED-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 அமைச்சர்களும் சிக்கலில் உள்ளனர்.