
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2022 பிப்ரவரியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பிரமுகரை தாக்கி அவமானப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.