சென்னை மாவட்டம் ராயப்பேட்டையில் 80 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி இரவு 11 மணிக்கு மூதாட்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தார்.

அவர் மூதாட்டியை மிரட்டி பணம் மற்றும் நகையை கேட்டுள்ளார். அப்போது மூதாட்டி தன்னிடம் எதுவும் இல்லை என கூறியதால் மர்ம நபர் மூதாட்டியை சரமாரியாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூதாட்டியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த நாகராஜன்(39) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் கைது செய்ய முயன்ற போது அவர் தப்பி ஓடியதால் கீழே விழுந்து கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.