சென்னை மாவட்டம் குன்றத்தூர் சேர்ந்த அபிராமி(39) டிக் டாக் மூலம் பிரபலமானவர். இவரது கணவர் விஜய் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

அபிராமி அடிக்கடி பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது அபிராமிக்கும் பிரியாணியை டெலிவரி செய்ய வரும் சுந்தரம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதனை அறிந்த விஜய் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கோபமடைந்த அபிராமி குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கழுத்தை நிறுத்தி கொலை செய்தார்.

அதன் பிறகு சுந்தரத்துடன் வீட்டை விட்டு ஓடினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அபிராமியை கைது செய்தனர். தற்போது அபிராமி மனம் வருந்தி பேசியுள்ளார். தப்பு பண்ணிட்டேன் என் குழந்தைகளை கொலை செய்திருக்க கூடாது.

அவங்க போட்டோவையாவது என்கிட்ட காட்டுங்க என கதறி அழுதுள்ளார். அவர் மீது உள்ள குற்றம் ஏற்கனவே நிரூபணம் ஆகிவிட்ட நிலையில் தீர்ப்பு வெளியாக போவதாக செய்திகள் வந்தது. ஆனால் இன்னும் அந்த வழக்கில் தீர்ப்பு வரவில்லை.