
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் 24 வயது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, பிவாண்டி மாவட்டத்தை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் என்னிடம் திருமண ஆசை காட்டி பழகினார். நானும் திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் அவரிடம் நெருங்கி பழகினேன். அதனை பயன்படுத்தி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி முதல் கடந்த 23ஆம் தேதி வரையில் என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அவர் தற்போது என்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு 2 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஐடி ஊழியரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் போலியாக instagram கணக்கு தொடங்கி அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அதில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.