பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் கிளர்ச்சிப்படை, தெக்ரிக் ஐ தலிபான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகிறது. இந்த தீவிரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு என்பது ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பலுச்சிஸ்தான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ரயிலை கடத்தினார்கள். இந்நிலையில் வடக்கு வசிர்ஸ்தான் மாவட்டங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் கண்டறியப்பட்டு பயங்கர துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு பாதுகாப்பு படை அதிகாரிகள் இருவரும் மரணம் அடைந்தனர். மேலும் காஸ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அரசு சந்தேகப்படுவதால் தற்போது இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.