
ஆஸ்திரேலியாவில் வர்ஜீனியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 41 வயது ஆகிறது. இவர் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசபெத்தின் 2-வது மகனும், இளவரசருமான ஆண்ட்ரூ 17 வயதில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வர்ஜீனியா புகார் அளித்தார்.
ஆண்ட்ரூவுடன் உடலுறவு கொள்ள ஜெஃப்ரி 15000 டாலர் கொடுத்ததாக ஆதாரங்கள் அடங்கிய கோப்பினை வர்ஜீனியா நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த வழக்கில் 2008-ஆம் ஆண்டு ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டு நியூயார்க் நகர சிறையில் ஜெஃப்ரி தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் ஆண்ட்ரூ தனது அரச பட்டங்களை இழந்தார்.
தற்போது வர்ஜீனியா ஆஸ்திரேலியாவில் இருக்கும் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். அதற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை.