
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு நேற்று பூத் கமிட்டி மாநாட்டிற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்றார். அவர் நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு சென்ற நிலையில் அவருக்கு கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வைத்தே தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதன் பிறகு ரோடு ஷோ நடத்தினார். நடிகர் விஜய் திறந்த வெளி வாகனத்தில் சென்றபோது அவருக்கு செல்லும் வழியெல்லாம் தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரத்தோடு வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மாலையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிலையில் ஏர்போர்ட்டில் திடீரென கட்டுக்கடங்காத அளவுக்கு தொண்டர்கள் கூட்டம் குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அங்குள்ள ட்ராலிகள் உள்ளிட்டவற்றை சேதடுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பொருட்களை சேதப்படுத்தியதற்காக தமிழக வெற்றி கழகத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று பயணிகளுக்கு இடையூறு செய்ததாக மற்றொரு வழக்கும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நோ பார்க்கிங் இடத்தில் பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தியதற்காக 133 வாகனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.