ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில், டெல்லி- மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வழக்கமான தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அதி வேகமாக வந்த லாரி பணியாளர்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.