தேனி மாவட்டம் சின்னமனூர் புதுகிணறில் மச்சப்பாண்டி (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகார் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மச்சபாண்டியை கைது செய்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.