இந்தியாவில் இது திருமண காலம் என்பதால் குடும்பத்தினர் நடனம் முதல் இசை வரை, உணவு முதல் அலங்காரம் வரை, அந்த நாளை மறக்கமுடியாததாக மாற்ற முழு மூச்சாக உழைக்கிறார்கள். திருமணத்தை சிறப்பாக்க பல மாதங்கள் திட்டமிடல் தேவைப்படுகிறது. ஆனால் சில நேரங்களில், எதிர்பாராத தருணங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

ஒரு பொய்யாவது சொல் கண்ணே என்ற பாடலின் முடிவில் மனக்கோலத்தில் இருக்கும் நடிகை சிம்ரன் தனது காதலன் பிரசாந்திடமே செல்வார். அதேபோன்று சமூக ஊடகங்களில் வைரலான பதிவின்படி, டெல்லியில் நடந்த ஒரு திருமணத்தின் போது டிஜே ‘சன்னா மெரேயா’ பாடலை வாசித்தார்.

இந்த பாடலைக் கேட்டதும், மணமகன் தனது முன்னாள் காதலியை நினைத்து ஏக்கம் மற்றும் உணர்ச்சிவசப்பட்டார். இதையடுத்து அவர் திருமணத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றார். ‘சன்னா மெரேயா’ என்பது சூப்பர்ஹிட் பாலிவுட் படமான ‘ஏ தில் ஹை முஷ்கில்’-ல் இருந்து பரவலாக விரும்பப்படும் பாடல் ஆகும்.