ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் தீவிரபடுத்தி உள்ளது.

இந்த பயங்கரவாத சம்பவத்தில் தொடர்புடைய அதாவது தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு 7 தீவிரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் இதனால் இனி விசாரணையை என்ஐஏ மேற்கொள்ள இருக்கிறது.