காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்புறம் பாகிஸ்தான் இருப்பதாக மத்திய அரசு கூறுவதால் அவர்களுக்கு சிந்து நதி நீரை நிறுத்தியது. அதோடு இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்ததோடு எல்லையில் ராணுவ வீரர்களையும் குவித்துள்ளது.

இதனால் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதே நேரத்தில் இந்த தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் மந்திரி ஹனிப் அப்பாசி இந்த விவகாரம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது இந்தியாவை தாக்க அணு ஆயுதங்கள் தங்களிடம் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சிந்து நதிநீரை நிறுத்தியதால் தற்போது இந்தியா போருக்கு தயாராக வேண்டும். நம்மிடமுள்ள ராணுவ ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பார்வைக்காக வைப்பதற்கு அல்ல. நாம் நாட்டில் எந்தெந்த பகுதிகளில் அணு ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளோம் என்பது யாருக்குமே தெரியாது. நம்மிடமுள்ள அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகள் அனைத்தும் இந்தியாவை நோக்கித்தான் உள்ளது. மேலும் இந்தியாவை தாக்குவதற்கு 130 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.