தினதோறும் சமூக ஊடகங்களில் பல சுவாரஸ்யமான கதைகளை பார்க்கிறோம். ஆனால் உலகின் பணக்காரப் பிச்சைக்காரர் என்று அழைக்கப்படும் பாரத் ஜெயின் குறித்த கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதாவது மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸுக்கு வெளியே பிச்சை எடுக்கும் இவர், தான் பெற்ற பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்துள்ளார்.

தற்போது இவர் இரண்டு சொகுசு பிளாட்டுகளுக்கு சொந்தக்காரர் ஆவார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இவர் தனது குடும்பத்திற்காக பிச்சை எடுக்க தொடங்கினார். இவரது தினசரி வருமானம் ரூ.2000 முதல் ரூ.2500 என்று கூறப்படுகிறது. இவரது மாத வருமானம் ரூ.60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை ஆகும். இது நாட்டின் கார்ப்பரேட் துறையில் பல தொடக்க நிலை தொழிலாளர்கள் சம்பாதிக்கும் வருமானத்தை விட அதிகமாகும்.

இந்த பணத்தின் மூலம் அவர் முதலீடு செய்து ரூ.1.4 கோடி மதிப்புள்ள இரண்டு உயர்நிலை அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்திருக்கிறார். இவரது நிகர் மதிப்பு ரூ.7.5 கோடி எனக் கூறப்படுகிறது. அதோடு மேலும் இரண்டு கடைகள் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு மாத வாடகை ரூ.30 ஆயிரம் ஆகும். இவரது குழந்தைகள் உயர்நிலைப் பள்ளியில்  படித்தனர். படித்து முடித்த பிறகு தனது குடும்பத்தின் தொழிலை நிர்வகிக்கின்றனர். நிலையான தொழிலைப் பெற முடிந்ததும் பாரத் ஜெயின் பிச்சை எடுப்பதை விடவில்லை.

இதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் இது ஒரு பழக்கமாக மாறிவிட்டதால் அவரால் அதை விட முடியவில்லை என்றும், சிலர் அவருக்கு தேவையான பணம் கிடைத்த போதிலும், குடும்ப நல்ல நிலையில் இருந்த போதிலும் இதை விடவில்லை என்றால் அதற்கு பணிவு தான் காரணம் என்றும் கூறுகின்றனர்.