
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18 வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கிய நிலையில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் அதிக முறை கோப்பையை வென்றுள்ள சென்னை அணி இந்த முறை 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று மற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
இதனால் சென்னை அணியின் மீது விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் நாங்கள் இடத்தில் சரியான வீரர்களை வாங்க தவறிவிட்டோம் என்றும் மற்ற அணிகள் நல்ல வீரர்களை வாங்கிய போது நாங்கள் அதை செய்யாமல் தவறியதுதான் தற்போது தோல்விக்கு காரணம் என்றும் கூறினார்.
அதோடு சென்னை அணியின் தோல்விக்கு தான் பொறுப்பு ஏற்பதாகவும் அறிவித்தார். அதே நேரத்தில் தோனி மீது தான் தற்போது ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருவதோடு அவருக்கு வயதாகிவிட்டது என்றும் இதுதான் ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் என்று விமர்சிக்கிறார்கள். தற்போது முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வரும் நிலையில் தோனி மட்டும்தான் சென்னை அணியின் தோல்விக்கு காரணமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் சுரேஷ் ரெய்னாவும் தற்போது தோனிக்கு ஆதரவு கொடுத்து பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தோனி தான் ஏலத்தில் வீரர்களை வாங்குவதாக பலரும் நினைக்கிறார்கள். வீரர்களை வாங்கலாமா வேண்டாமா என்று அழைப்பு வேண்டுமானால் அவருக்கு வரலாம். ஆனால் அவர் ஏலத்தில் கலந்து கொள்வதில்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட வீரர்களை தோனி வாங்கி இருப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்களா.?
43 வயதில் கேப்டனாக உழைக்கும் தோனி இந்த வயதில் கூட தன்னுடைய கடின உழைப்பை கொடுக்கிறார். 43 வயதிலும் கேப்டன்ஷிப் மற்றும் விக்கெட் கீப்பிங் என மொத்த அணியையும் தோளில் சுமக்கிறார். ஆனால் மற்ற வீரர்கள் என்ன செய்கிறார்கள். 18 கோடி, 17 கோடி மற்றும் 16 கோடி சம்பளம் வாங்கிய வீரர்கள் கேப்டனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
இதனால்தான் இதற்கு முன்பு தோல்வியை சந்திக்காத அணிகளிடம் கூட நாம் தோற்று வருகிறோம். சில வீரர்கள் நீண்ட காலமாக விளையாடி வரும் நிலையில் அவர்கள் இருந்தும் முடிவு என்ன. அதே தவறுகளை நீங்கள் செய்து தான் தோற்கிறீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் தோனிக்கு ஆதரவாக மற்ற சிஎஸ்கே வீரர்களை சுரேஷ் ரெய்னா கடுமையாக விமர்சித்துள்ளார்.