தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கம் இரண்டு நாட்களாக நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். அவர் ஏர்போர்ட்டில் வருகை புரிந்ததும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த நிலையில் ரோடு ஷோ ஏராளமான தொண்டர்கள் வழிநெடுகிலும் வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இது பற்றி தற்போது பேசியுள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடைபெற்ற நிலையில் அதில் ஏராளமானோர் கலந்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் கிடையாது. நடிகர்களை பார்க்க எப்போதும் கூட்டம் கூடுவது வழக்கம் தான்.

கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக வடிவேலு சட்டசபை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்த போது அவருக்காகவும் இப்படித்தான் ரசிகர்கள் கூட்டம் வந்தது. ஆனால் வந்தவர்கள் யாரும் வடிவேலு ஆதரவு கேட்ட வேட்பாளருக்கு ஓட்டு போடவில்லை. அந்த தேர்தலில் நான் 38,888 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.

இதேபோன்றுதான் நடிகர் விஜய்யை பார்க்க வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது. தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் ஒரே ஒரு குறிக்கோள். மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் கூட்டணி வைக்க அதிமுக தயார் என்று கூறினார்.