
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் எதிரே அமைந்துள்ள இருட்டுக்கடை அல்வா நெல்லையின் முக்கிய அம்சமாகும். அந்த இருட்டு கடையை கிருஷ்ணசிங் என்பவர் ஆரம்பித்த நிலையில் பல தலைமுறைகளாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. பின்னர் அவருடைய மகன் பிஜிலி சிங் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சுலோச்சனா பாய் ஆவார். தற்போது நயன்சிங் என்பவர் இவர்கள் இருவருக்கும் வாரிசு இல்லாத காரணத்தால் அவர்களது சொத்துக்கள் மற்றும் இருட்டுக்கடை ஆகியவை சுலோச்சனா பாய் உயிருடன் இருக்கும் வரை அனுபவம் மட்டும் செய்துவிட்டு அதன் பின் அந்த சொத்துக்கள் தனக்கு வந்து சேர வேண்டும் என்று உயிலில் குறிப்பிடப்பட்டிருப்பதாக பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த அறிவிப்பு முற்றிலும் பொய்யானது என நயன் சிங்கின் சகோதரியான கவிதா என்பவர் வழக்கறிஞர் உதவியுடன் பேட்டி அளித்துள்ளார். அதில் போலி உயிலை தயாரித்து இருட்டுக்கடை உள்ளிட்ட சொத்துக்களை தன்னிடமிருந்து தன்னுடைய சகோதரர் அபகரிக்க முயற்சி செய்வதாகவும், சுலோச்சனா பாய் உயிருடன் இருக்கும் போதே இருட்டு கடையை கவிதா சிங் என்பவர் நடத்தி வருவதாகவும் அவருடைய வழக்கறிஞர் கூறினார். அதோடு சுலோச்சனா பாய் உயிருடன் இருக்கும்போது சொத்துக்களுக்கு உரிமை கோராத நயன்சிங் தற்போது வெளியிட்டுள்ள பொது அறிவிப்பை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அவர் அளித்த போலி உயில் பற்றி காவல் நிலையத்தில் புகாரில் கூறியுள்ளார்.