ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 41 ரன்கள் வரை எடுத்தார். அதன்பிறகு களமிறங்கிய பெங்களூர் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் குருணால் பாண்டியா அரை சதம் கடந்த நிலையில் விராட் கோலி 51 ரன்கள் வரை எடுத்திருந்தார். இந்த போட்டிக்கு பிறகு விராட் கோலி கே.எல் ராகுலை கேலி செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது. அதாவது கடந்த முறை ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகள் மோதும் போது டெல்லி வெற்றி பெற்றதால் கே எல் ராகுல் காந்தாரா முறையில் செலிப்ரேஷன் செய்தார். இதன் காரணமாக விராட் கோலியும் அதே செலிப்ரேஷனை இரண்டு முறை கே எல் ராகுலிடம் செய்து காண்பித்தார். பெங்களூரு மைதானத்தில் கே எல் ராகுல் செய்த செய்கையை டெல்லி மைதானத்தில் விராட் கோலி ஜாலியாக செய்து காண்பித்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.