சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(68). இவருக்கு சொந்தமாக மடிப்பாக்கத்தில் உள்ள 2840 சதுர அடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் அபகரித்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த சுந்தர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தி.நகரை சேர்ந்த ராணி என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அந்த நிலத்தை கிரையம் பெற்றது போல போலியான ஆவணத்தை பதிவு செய்துள்ளனர். பின்னர் ராணி தனது மகன் ரமேஷ் குமாருக்கு செட்டில்மென்ட் ஆவணம் மூலம் அந்த நிலத்தை பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து செல்வ நாகராஜன் என்பவருக்கு போலியாக பொது அதிகார பத்திரம் பதிவு செய்து கொடுத்ததும் விசாரணையில் உறுதியானது. இதனால் ராணி, ரமேஷ் குமார், செல்வநாயகம், இவர்களுக்கு உடனடியாக இருந்த சங்கர் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.