உத்திர பிரதேச மாநிலம் மீரட் சர்தானா பகுதியில் சனா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தான் நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட நபரை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சனா தனது குடும்பத்தினருடன் 45 நாள் விசாவில் இந்தியாவிற்கு வந்திருந்தார். தற்போது அவருடைய விசா காலாவதி ஆகிவிட்டதால் சனாவின் கணவரை இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் கூறினர்.

அதன்படி அவர்கள் கடந்த 24ஆம் தேதி வாகா எல்லை வழியே பாகிஸ்தானுக்குள் செல்ல முயற்சி செய்தனர். அப்போது எல்லையில் நின்று கொண்டிருந்த பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களிடம் சோதனை செய்த போது இந்திய பாஸ்போர்ட் இருந்ததால் அவர்களை பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சனாவின் குழந்தைகள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை எல்லையை கடக்க   அனுமதி வழங்கினர். ஆனால் சனா தனது குழந்தைகளை தனியாக அனுப்ப மறுப்பு தெரிவித்த நிலையில் எல்லைப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.