
தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கல்குவாரி கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் கூட்டம் நடைபெற்றது. இதில் 25.4.2025 நாளிட்ட மனுவில் தெரிவித்துள்ள கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. இந்த கூட்டத்தில் மனுவில் குறிப்பிட்டுள்ள பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு, கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம், எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றிற்கு ஏற்றப்பட்ட விலையில் இருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்யப்படும் என்றும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூபாய் 33 என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அரசாணை ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் இயற்கை வளங்கள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் எ.சரவணவேல்ராஜ், கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்கே.சின்னச்சாமி, சங்கத்தின் உறுப்பினர்கள் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.