இஸ்லாமியர்களின் பண்டிகையான ஈத் கொண்டாட்டம் நாட்டின் பல பகுதிகளில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவிலும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. கடந்த மார்ச் 31ஆம் தேதி ஈத் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு பகுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பெண் நிருபர் ஒருவர் பொதுமக்கள் மத்தியில் நின்று கேமராவை பார்த்தபடி ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அருகில் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்தார்.

அப்போது கேமரா கீழ்நோக்கி சென்றதால் அதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் 87,800 க்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. அதோடு 2000 பேர் லைக் செய்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் சிலர் “இது முட்டாள்தனம் இல்லை…. நேரடியான அறை” என்றும், “சிறுவன் ஏதாவது தவறுதலாக நடந்து கொண்டதற்காக உடனடி தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம்” என்றும் நகைச்சுவையாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 

ஆனால் சிலர் இதனை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து வரும் பட்சத்தில் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அந்த பெண் நிருபர் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் சம்பந்தப்பட்ட ஊடகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் கொடுக்காததால் இது குறித்து எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என நெட்டிசன்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.