தமிழக சட்டசபை கூட்ட தொடரில்  முதல்வர் ஸ்டாலின் மக்களுக்காக சிறந்த அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில் ஊராட்சிகளில் விளம்பர பலகைகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்துள்ளார்.

அந்த புதிய மசோதாவில், ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், மின்னணு திரைகள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படுவதுடன், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு ஒரு சதுர மீட்டருக்கு 15,000 என்ற கட்டணத்தின் அடிப்படையில் 3 ஆண்டுகள் உரிமம் பெறலாம் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.