
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக செய்தி வெளியிட்ட பிபிசி இந்தியா நிறுவனம், தாக்குதலை நிகழ்த்தியவர்களை ‘பயங்கரவாதிகள்’ என குறிப்பிடாமல் ‘போராளிகள்’ என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. பிபிசி இந்தியாவின் இந்திய தலைவருக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ள அமைச்சகம், இதுபோன்ற செய்திகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டுமெனவும், எதிர்கால நடவடிக்கைகளில் கவனமாக இருக்கு வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Government objects to BBC’s reporting on the Pahalgam terror attack. A formal letter has been sent to BBC on the terming of terrorists as militants.#BBC #PahalgamTerrorAttack #Pahalgam #PahalgamTerroristAttack #JammuAndKashmir pic.twitter.com/cIPWKbvuZW
— All India Radio News (@airnewsalerts) April 28, 2025
“>
இதற்கு முந்தைய காலகட்டங்களில், குஜராத்த கலவரம் தொடர்பாகவும் பிபிசி நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. அந்தச் சூழலில் பிபிசி இந்தியா நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி துறை சோதனைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக செய்தி வெளியீட்டிலும் பிபிசி இந்தியா நிறுவனத்தின் கருத்தில் மாறுதல் வெளிப்பட்டுள்ளதால், மத்திய அரசும் வெளியுறவுத்துறையும் இது குறித்து அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த புதிய நோட்டீஸ் நடவடிக்கை, பிபிசி இந்தியா நிறுவனம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் இடையே ஏற்பட்டிருக்கும் முறையீட்டு போக்கை மேலும் தீவிரப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
பயங்கரவாதத்தை குறைக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய காலகட்டத்தில், ஒரு பன்னாட்டு ஊடகம் ‘போராளிகள்’ எனும் சொல்லை பயன்படுத்தியிருப்பது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான விளைவுகள் எதிர்காலத்தில் மேலும் கடுமையாக அமையக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.