
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. அதன்படி பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. குறிப்பாக பாகிஸ்தான் உடனான சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இதேபோன்று நாட்டின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரில் தாக்குதல் நடத்த இடம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து ராணுவ தளபதி உபேந்திரா திவேதி ஆய்வு செய்தார். மேலும் இரு நாடுகளுக்கு இடையே எந்த நேரமும் போர் வெடிக்கும் சூழல் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்திய கடற்படை அரபிக் கடலில் எதிரி நாடுகளின் போர்க்கப்பலை ஏவுகணை மூலம் அளிக்கும் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய கடற்படை தனது எஸ்க் பக்கத்தில் கூறியதாவது, இந்திய கடற்படை போர் கப்பல்களில் நீண்ட தூரம் சென்று எதிரிகளின் போர்க்கப்பல்களை துல்லியமாக தாக்கி அளிக்கும் ஏவுகணை சாதனையை மேற்கொண்டது. நம் நாட்டின் கடசார் நலன்களை பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. தேச நலனை பாதுகாப்பதற்கான பணியில் எந்த நேர தாக்குதலுக்கும் இந்திய கடற்படை தயாராக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.