சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானிய கோரிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். இது குறித்த அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் லாக்கப் மரணங்கள், என்கவுண்டர்கள் அதிகரித்து வருகின்றன. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்கவுண்டரில் மரணம் அடைந்ததாக தகவல் வந்தது.

திருவேங்கடம் நீதிமன்றத்தில் வாய் திறந்ததால் உண்மை குற்றவாளிகள் மாட்டிக் கொள்வார்கள் என்பதற்காக போல் என்கவுண்டர் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். திமுக ஆட்சியில் உளவுத்துறை செயல் இழந்துவிட்டது.

குற்றம் செய்ய பயம், அச்சம் இருக்க வேண்டும். இந்த ஆட்சியில் அச்சம் பயம் இல்லாததால் விமான மூலம் வந்து குற்ற செயல்களை செய்கின்றனர். அதிமுக ஆட்சியில் காவல்துறை மீது பயம் இருந்தது. போதைப்பொருள் விற்பனை சாதாரணமாக நடிக்கிறது என்று கூறினார்.