
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ஏழு பேர் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தொட்டபெட்டா தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. காருக்கு முன்னே கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயங்களுடன் உயிர்த்தப்பினர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த இரண்டு பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் விபத்தில் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.