
மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் ஷாஜி என் கருண். இவருக்கு 73 வயது ஆகும் நிலையில் தற்போது உடல்நல குறைவினால் காலமானார். இவர் ஒளிப்பதிவாளரும் கூட. இவர் இயக்கிய பிறவி திரைப்படம் 70 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு வனஸ்பிரதம், குட்டி ஸ்ரங்க் உட்பட 7 திரைப்படங்களுக்கு தேசிய விருதினையும் வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.