
பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது 3 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை மைனர் சிறுமி ஒருவர் திருமணம் செய்துள்ளார். ஓரினச்சேர்க்கையின் காரணமாக இந்த திருமணம் நடந்துள்ளது. இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண்ணையும் அவரது கணவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதாவது கடந்த 11 வருடங்களுக்கு முன்பாக கிருதி என்ற பெண் கிருஷ்ணகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கிருஷ்ணகுமார் வேலைக்காக ராஜஸ்தானில் இருக்கும்நிலையில் அவருடைய மனைவியும் சிறுமியும் முதலில் whatsapp உரையாடல் மூலம் பழகியுள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி கிருதி மற்றும் அந்த சிறுமி இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.
அவர்கள் இருவரும் கிருதியின் கணவர் கிருஷ்ணகுமார் இருக்கும் ராஜஸ்தானுக்கு சென்றனர். பின்னர் கிருதி தன்னுடைய கணவனின் கண்முன்னே அந்த சிறுமியை ஓரினச்சேர்க்கையின் வெளிப்பாடாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன் கணவருடன் அந்தப் பெண் சிறுமியுடன் வாழ ஆரம்பித்தார். இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தவுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மூவரையும் பிடித்தனர்.
சிறுமியைப் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்த நிலையில் அந்தப் பெண்ணையும் அவரது கணவரையும் கைது செய்தனர். இது பற்றி கிருஷ்ணகுமார் கூறும் போது தன்னுடைய மனைவி என்னை விட்டுக் கூட பிரிவேன். ஆனால் சிறுமியை விட்டு பிரிய மாட்டேன் என்று கூறியதால் தான் இருவரின் திருமணத்திற்கும் சம்மதித்ததாக கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.