இந்திய தொன்மை காலத்து அறிஞர் மற்றும் மகான் சாணக்கியர் ஆவார். இவர் சாணக்கிய நீதியின்படி திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் கொண்டு செல்ல மனைவி கணவரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத சில விஷயங்களை சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஷயங்கள் பகிரப்படுவதால் உறவில் மன அழுத்தம், தவறான புரிதல் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். இன்றும் அவரது கருத்துக்கள் வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்த உதவுகின்றன. இந்நிலையில், சாணக்கியர், மனைவி ஒருவர் தனது கணவரிடம் பகிரக்கூடாத சில முக்கியமான 5 விஷயங்களை சாணக்கியர் “சாணக்கிய நீதி” என்னும் நூலில் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

அதாவது சாணக்கிய நீதியின்படி, மனைவி ஒருவர் தனது கடந்தகால உறவுகள் அல்லது காதல் விவரங்களை தனது கணவரிடம் ஒருபோதும் பகிரக் கூடாது. விஷயம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், பழைய சம்பவங்களைப் பேசுவதால் கணவரின் மனதில் சந்தேகம் அல்லது பொறாமை உருவாகும் அபாயம் உள்ளது. கடந்த காலத்தை மறந்து, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என சாணக்கியர் வலியுறுத்துகிறார்.

ஒரு மனைவி, தன் பெற்றோர் வீட்டு விவகாரங்களை அல்லது குடும்பத்தின் உள்ளக பிரச்சினைகளை கணவரிடம் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். தாயார் வீட்டின் நிதிப் பிரச்சினை, தகராறு போன்ற விஷயங்களை பகிர்வது கணவரின் மனதில் தவறான பார்வையை ஏற்படுத்தி, மரியாதையை குறைக்கும் வாய்ப்புண்டு. எனவே மிக அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே தேவையான அளவு தகவலை பகிர வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

சாணக்கிய நீதியின்படி, ஒருவரது தனிப்பட்ட பலவீனங்களை, தன் கணவரிடமோ அல்லது பிறரிடமோ வெளிப்படுத்தக் கூடாது. அவ்வாறு வெளிப்படும் பட்சத்தில் கணவரே கூட பலவீனங்களை எதிராக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால், மன உறுதியுடன் அதை இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

மிகவும் உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய தனிப்பட்ட ஆசைகள் அல்லது கனவுகளை கணவரிடம் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக கணவரின் நிதி நிலைமை அல்லது அவரின் எண்ணத்திற்கு முரணான ஆசைகள் குறித்து பேசுவது அவர் மீது அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இத்தகைய விஷயங்களை பகிர்வதற்கு சரியான நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.

மற்றவர்களின் நம்பிக்கைக்குரிய தகவல்களை கணவரிடம் பகிர்வதை சாணக்கியர் கடுமையாக எச்சரிக்கிறார். நண்பர்கள் அல்லது உறவினர்கள் சொன்ன ரகசியங்களை வெளிப்படுத்துவது, நம்பகத்தன்மையை இழப்பதற்கு காரணமாகின்றது. இது உங்கள் சமூக மரியாதைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவுறுத்துகிறார்.