
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பின்புறம் பாகிஸ்தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானியர்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்பிறகு சிந்து நதி நீரையும் நிறுத்திவிட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் இந்திய ராணுவம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் முன்னாள் பாகிஸ்தான் வீரர் என்பது தெரியவந்துள்ளது.
அவருடைய பெயர் ஷாஷிம் மூசா. இவர் பாகிஸ்தான் முன்னாள் பாரோ கமெண்டர் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவருக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு கந்தர் பாலில் நடைபெற்ற தாக்குதலிலும் தொடர்பு இருப்பதாக என்ஐஏ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இவர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்ற தொடர்புடையவர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார்.