தமிழக பாஜக தலைவராக கடந்த சில நாட்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். முன்னாள் தலைவரான அண்ணாமலையின் பதவி குறித்து பேசப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. கட்சியின் தேசிய கட்டமைப்பில் அவரது திறன்களை பாஜக பயன்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினருக்கு தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகின. இந்நிலையில் ஆந்திராவில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பகா வெங்கட சத்திய நாராயணா போட்டியிடுவார் என்று பாஜக தலைமை என்று வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் விஜய் சாய் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்னும் மூன்றாண்டுகள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் தனது சொந்த காரணங்களுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.