தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருக்கும் இசைஞானி இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த பிரதமரின் பெயர்களையும் அவர்கள் நாட்டுக்காக என்ன செய்தார்கள் என்பதையும் எழுதுங்கள். மவுண்ட் பேட்டன் காலத்திலிருந்து அவர்கள் இந்தியாவுக்காக என்ன செய்தார்கள் என்பதை எழுத வேண்டும்.

அதன்பிறகு பிரதமர் மோடிக்காக தனிப்பட்டியலை தயார் செய்யுங்கள். இரண்டு பட்டியலையும் தனித்தனியாக தயார் செய்தால் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தார் என்பது தெரியும். கடந்த 1988 ஆம் ஆண்டு நான் முதன்முதலாக காசிக்கு சென்றேன். அப்போது அது சிறுநீர் கழிக்கும் இடம் போல காட்சி அளித்தது. ஆனால் இப்போது அது முற்றிலுமாக மாறிவிட்டது. சுத்தமான கங்கை நதியை மக்கள் அசுத்தம் செய்து கொண்டிருந்த நிலையில் அதனை முற்றிலும் மாற்றியது பிரதமர் மோடி தான்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய நாட்டின் மீது பற்று இருப்பதால்தான் இதையெல்லாம் செய்கிறார். ஒருவேளை நமக்கு மோடி வேண்டாம் என்றால் அனைத்து மக்களும் தேர்வு செய்யக்கூடிய ஒரு தலைவரின் பெயரை நீங்களே சொல்லுங்கள். அப்படி யாராவது இருந்தால் சொல்லுங்கள். மேலும் இன்னும் 20 வருடங்கள் ஆனாலும் இந்தியாவை மோடி தான் ஆட்சி செய்யணும் என்று கூறினார்.