ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பஹல்காம் என்ற சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அசாமில் வசித்து வரும் லக்னோ பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரான மாதிரி ககோட்டி வெளியிட்ட வீடியோ ஒன்று பாகிஸ்தானில் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசிய அவர் மோடி அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்து வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் துப்பாக்கியால் சூடுவதற்கு முன்பாக மதத்தை கேட்டு தாக்குவது பயங்கரவாதம் என்று கூறுகிறீர்கள். மதத்தை கேட்டவுடன் கும்பல் கும்பலாக கொலை செய்வதும், வீடு கொடுக்க மறுப்பதும், மதத்தின் அடிப்படையில் வேலையை விட்டு நீக்குவதும் பயங்கரவாதம் தான். எனவே உண்மையான பயங்கரவாதியை அடையாளம் காண வேண்டும்.

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் அவர்களில் உங்களையும், என்னையும் போன்று சாதாரண இந்தியர்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் அவர்களின் உடல்களின் புகைப்படங்களை சேமிப்பதில் மட்டும்தான் தீவிரம் காட்டினர். அதோடு பொறுப்பானவர்களிடம் நியாயமான கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. உள்நாட்டு பாதுகாப்பில் நடந்த குறைபாடு பற்றி உள்துறை அமைச்சருக்கு எதுவுமே தெரியாது என்று விமர்சித்திருந்தார். மேலும் இந்த வீடியோவை இந்த வீடியோ தற்போது பாகிஸ்தானில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.