தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு அருகில் காஞ்சா கச்சிபௌலி பகுதியில் 400 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. தற்போது இந்த நிலத்தை மறு சீரமைப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த நிலத்தை மறு சீரமைப்பு செய்து அதில் ஒரு ஐடி பூங்காவை அமைக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்கலைக்கழகத்தின் முன்பு குவிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மூத்த இந்திய நிர்வாக சேவை அதிகாரி ஸ்மிதா சபர்வால் 400 ஏக்கர் நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுவது தொடர்பாக ஏஐ யால் உருவாக்கப்பட்ட கிப்லி படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வைரலான நிலையில் இதனை பகிர்ந்ததற்காக தெலுங்கானா அரசு அவரை இடமாற்றம் செய்துள்ளது. தொடர்ந்து தெலுங்கானாவில் இடம் மாற்றம் செய்யப்பட்ட 20 அதிகாரிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது ஸ்மிதா சபர்பால் தெலுங்கானா நிதி ஆணையத்தின் செயலாளராக மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.