
பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் திருநங்கை ஒருவரின் காதல் விவகாரம் கொலையில் முடிந்தது. பூஜா எனும் திருநங்கை மற்றும் அவரது இரண்டு காதலர்கள் இணைந்து முதல் காதலரான சத்ரே ஆலமைக் கொன்றது பீகார் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது.
இக்குற்றச்செயலைத் தொடர்ந்து, சீதாமர்ஹி எஸ்பி அமித் ரஞ்சன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, மனித மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து மர்மம் கண்டறியப்பட்டது.
ஏப்ரல் 4-ஆம் தேதி சோன்பர்சா காவல் நிலைய எல்லையில் உள்ள கச்சாரிபூர் பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் அஜய் குமார், ரவீந்திர குமார், பூஜா மற்றும் லால்பாபு ராய் ஆகியோர் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இறந்தவர் சத்ரே ஆலம் என்பதும், அவர் பூஜாவுடன் பழைய காதலர் என்பதும் தெரியவந்தது. காதல் விரிசலால் ஏற்பட்ட கோபத்தில், புதிய காதலன் ரவீந்திரகும் மற்ற நண்பர்களும் சேர்ந்து சத்ரே ஆலமைக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றச்செயலில் பயன்படுத்தப்பட்ட கயிறு, வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரிக்க காவல் ஆய்வாளர் தர்மேந்திர குமார் மற்றும் குழுவினர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.