
தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ற சட்டசபை கூட்ட தொடரின் போது காவலர்களுக்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி இனி வருடம் தோறும் செப்டம்பர் 6-ம் தேதி காவலர்கள் நாளாக கொண்டாடப்படும். காவல்துறையின் செய்தி மற்றும் ஊடக துறையை நிர்வாகிக்கும் பொருட்டு புதிதாக ஒரு காவல் கண்காணிப்பாளர் பதவி உருவாக்கப்படும்.
சென்னை ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களை தவிர அனைத்து மாவட்ட மற்றும் மாநகரங்களிலும் பிரத்தியேக சமூக ஊடக மையங்கள் உருவாக்கப்படும். சென்னை ஆயுதப்படையில் புதிய பணியிடங்களும், 250 காவல் ஆய்வாளர்கள் பணியிடங்களும் உருவாக்கப்படும். உதகை மற்றும் தர்மபுரியில் சுமார் 101 கோடியில் ஆயுதப்படை காவல் குடியிருப்புகள் கட்டப்படும். மேலும் காவல்துறைக்கு 350 நான்கு சக்கர வாகனங்களும், 50 தடவியல் நடமாடும் வாகனமும் வழங்கப்படும் என்றார்.