அமெரிக்காவில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில், தன்னை எளிதான இலக்காக நினைத்த திருடனை கார் உரிமையாளர் தைரியமாக எதிர்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சாதாரண நாளை போலவே துவங்கிய இந்த சம்பவம், மோட்டார் சைக்கிளில் வந்த திருடன் திடீரென துப்பாக்கியுடன் மிரட்டியதும் பரபரப்பாக மாறியது.

ஆனால், எதிர்பாராத விதமாக காரின் உரிமையாளர் தன்னுடைய ஆயுதத்தை எடுத்து சுட்டதும் திருடன் தன் ஆயுதத்தை வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்றார். தப்பிக்க முயன்றபோது பைக் நழுவி விழுந்தது. இதையடுத்து அவரால் ஓட முடியவியில்லை. உடனே அவர் ஆஜர் ஆகினார்.

 

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் தீவிரமாக பரவி வருகிறது. பல லட்சம் பார்வையாளர்களையும் ஆயிரக்கணக்கான விருப்பங்களையும் பெற்றுள்ள இந்த வீடியோவில், நெட்டிசன்கள் தங்களது நக்கலான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ஒருவர் “பேட் லக்!” என்று சிரித்துக் குறிப்பிட்டிருந்தார், மற்றொருவர் “பைக் நலமா?” என நகைச்சுவை செய்துள்ளார். எதிர்பாராத திருப்பத்துடன் நடந்த இந்த சம்பவம், உண்மையான வாழ்க்கை சாகசக் காட்சியைப் போன்றது என்று பலரும் கூறியுள்ளனர்.