பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு மெட்ரோ ரயிலில் அமர்ந்து உணவு சாப்பிடக்கூடாது, வீடியோ புகைப்படம் எடுக்கக் கூடாது, மதுபானங்கள், புகையிலை பொருள்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி மாதவராவில் இருந்து புறப்பட்டு மாகடி ரோடு பகுதிக்கு செல்லும் மெட்ரோ ரயிலில் பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் பயணத்தின் போது இருக்கையில் அமர்ந்து கொண்டு உணவருந்தியுள்ளார்.இதனை ரயிலில் பயணித்த மற்றொரு நபர் வீடியோவாக பதிவு செய்தார். பின்னர் அந்த வீடியோவை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.

அதன்படி மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் வீடியோவில் காணப்பட்ட பெண்ணை கண்டுபிடித்து மெட்ரோ ரயிலில் உணவருந்திய காரணத்திற்காக அந்தப் பெண்ணுக்கு ரூ 500 அபராதம் விதித்தனர். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது.