
ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இருநாட்டினருக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ படைகளை குவித்து வருவதாக பேசப்படுகிறது. இதைத் தொடர்ந்து துருக்கியும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ராணுவ உதவியை வழங்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதன்படி துருக்கிக்கு சொந்தமான விமானம் ஒன்று கராச்சியில் உள்ள விமானப்படை தளத்தில் தரை இறங்கியதாக செய்தி வெளியானது. இந்நிலையில் அந்த விமானத்தில் பாகிஸ்தானுக்கு தேவையான போர்க்கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது துருக்கி அரசாங்கம் இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது.
சரக்கு விமானம் மட்டும்தான் அனுப்பப்பட்டதே தவிர மற்றபடி பாகிஸ்தானுக்கு எந்த விதமான போர் விமானங்களையும், ஆயுதங்களையும் தாங்கள் வழங்கவில்லை என்று கூறியுள்ளனர்.