தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபை கூட்டத்தொடரின்  போது அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் கண்டிப்பாக திமுகதான் ஆட்சி அமைக்கும் என்றார். அதன் பிறகு இதுவரை பார்த்தது பார்ட் 1 தான். 2026 ஆம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சியின் version 2.0 loading என்று கூறினார். இதனை தற்போது எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி! பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி! போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி! போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி! ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி! Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure. இதில் இன்று Version 2.0 Loading ஆம்!

அதிமுக ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி! 2026-ல் ஒரே version தான் – அது  அதிமுக version தான்! மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய ‘ஓ’ (0) வாக போட்டு #ByeByeStalin… என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி என்று பதிவுட்டுள்ளார். மேலும் #ByeByeStalin… என்ற ஹேஷ்டேக் தற்போது எக்சில் ட்ரெண்டாகி வருகிறது.