ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே புதலாப்பட்டு டு நாயுடு பேட்டை செல்லும் வழியில் தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியை இந்த முயற்சி செய்தபோது கண்ணிமைக்கும் நொடியில் லாரியின் அடியில் கார் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்தவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் இறங்கினர்.

பல மணி நேரம் கழித்து 2 ஆண்கள், 2 பெண்கள், 1 சிறுவன் உட்பட 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயர்ந்த உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் காரில் பயணித்தவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்ற போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.